இந்தியா

இந்தியாவில் 2 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 3,68,147 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் காரணத்தினால் தற்போது நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அனைத்து வகையான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மக்களிடையே தொடர்ந்து அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. சுமார் ஒரு வார காலத்திற்கும் மேலாக நாட்டில் 3 லட்சத்தை தாண்டி வருகிறது கொரோனா பாதிப்பு. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,68,147 பேரிடம் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,25,604 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,417 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,18,959 ஆக அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸில் இருந்து 3.00,723 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,93,003 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 34,13,642 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: