சினிமா

நயன்தாரா தந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் – ரசிகர்கள் சோகம்!!

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா அவர்கள். தென்னிந்திய மொழிப்படங்கள் பல நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை நயன்தாரா. இவரின் தந்தை குரியன் கோடியாட்டு நலக்குறைவால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை நயன்தாரா அவர்கள். தமிழை பொறுத்தவரை ஐயா படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தன்னுடைய திறமையால் தனக்கு நிகர் யாருமில்லை என நிரூபித்தவர். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் அறிமுக இயக்குனரான விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு, தற்போது வரை இருவரும் காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் காண வேண்டும் என்று அவரின் தந்தை ஆசைப்பட்டார்.

இந்நிலையில் கொச்சியில் வசித்து வரும் நயன்தாராவின் தந்தை கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரின் நிலை மிக மோசமடையவே கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தந்தையின் பக்கத்தில் இருந்து நயன்தாரா கவனித்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் துபாயில் இருக்கும் குரியன் கோடியாட்டு மகனும் இந்த தகவல் அறிந்து கொச்சி திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: