ஆரோக்கியம்

உடல் எடையை சீராக்க இயற்கை காட்டும் வழிகள்!

ஒருவரது உடல் எடையை மரபியல், பழக்கவழக்கங்கள், வளர்சிதை மாற்றம் ஆகியவை தீர்மானிக்கிறது. இந்நிலையில், உடல் எடையை பராமரிப்பதன் மூலம் உடற்பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். அதையடுத்து, வாழ்க்கை முறை மற்றும் உணவில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது.

இயற்கை வழிகள்

இயற்கையாக கிடைக்கும் புரதச்சத்துக்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் தசைகள் வலுவாகி, உடல் எடை குறையும்.

அதிகளவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், பசியையும் குறைக்கிறது.

கிரீன் டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை ஆகிய சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளது.

முலாம் பழத்தில் இருக்கும் ஏராளமான நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம்.

தேனை மிதமான சுடுதண்ணீரில் கலந்து தினந்தோறும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

தவிர்க்க வேண்டியவை

  • குளிர்பானங்கள்
  • குக்கீஸ், கேக்
  • உருளைக்கிழங்கு சிப்ஸ்
  • பீட்சா
  • ஐஸ்கிரீம்
  • சாக்லேட்
  • எண்ணெயில் பொரித்த உணவுகள்

கவனிக்க வேண்டியது

தினந்தோறும் குறைந்த பட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும்.

காலை உணவை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

தினமும் முடிந்த அளவு உடற்பயிற்சி செய்வது நல்லது.

எப்படி செயல்படுத்துவது

திட்டமிட்ட நேரத்திற்கு பழக்கவழக்கத்தை மாற்றவேண்டும்.

விடுமுறை நாட்களிலும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க:  நன்மைகள் நிறைந்த கோவைக்காய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: