உலகம்தொழில்நுட்பம்

பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியபோது பதிவான முதல் ஆடியோ.. நாசா விஞ்ஞானிகள் வெளியீடு..

அமெரிக்‍காவின் பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது பதிவு செய்யப்பட்ட முதல் ஆடியோ பதிவை நாசா வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை கண்டறிய, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த ஆய்வுக்‍காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம், கடந்த 18-ம் தேதி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது.

இந்நிலையில், பெர்சவரன்ஸ் விண்கலம் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ பதிவை நாசா வெளியிட்டுள்ளது.

பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிய கடைசி நிமிட வீடியோ பதிவையும் நாசா வெளியிட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் 25 கேமராக்‍கள் மற்றும் 2 மைக்‍ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.

Back to top button
error: Content is protected !!