தமிழ்நாடுபொழுதுபோக்கு

கோடை காலத்திற்கு ஏற்ற நன்னாரி பால் சர்பத்..!

கோடை காலத்தில் வெளுத்து வாங்கும் வெயிலால் நாம் உடல் சூட்டினால் தவித்து வருவோம். அத்தகைய உடல் சூட்டினைக் குறைக்கும் நன்னாரி பால் சர்பத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

  • பால் – 100 மில்லி
  • பாதாம் பிசின் – 2 ஸ்பூன்
  • நன்னாரி சர்பத் – 2 ஸ்பூன்
  • ஐஸ் கட்டிகள் – 3

செய்முறை

ஒரு கிண்ணத்தில் பாதாம் பிசினைப் போட்டு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து பாலை கொதிக்கவைத்து ஆறவிடவும்.

பாதாம் பிசினுடன் ஆறவைத்த பால், நன்னாரி சர்பத், பாதாம் பிசின் சேர்த்து ஐஸ் கட்டிகளைப் போட்டு குடித்தால் நன்னாரி பால் சர்பத் ரெடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: