பொழுதுபோக்குதமிழ்நாடு

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ‘மட்டன் மசாலா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க..!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் எல்லாருமே விரும்புவது அசைவ உணவுகள் தான். அதிலும் மட்டன் என்றால் அது தனி பிரியம் என்றே சொல்லலாம். கிராமத்தில் அதிகமாக மட்டனை தான் அதிகம் சமைத்து சாப்பிடுவர். இப்பொழுது அந்த மட்டனை வைத்து மட்டன் மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

Spicy Mutton Curry Ingredients

மட்டன் – 1/2 கி

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

பெரிய வெங்காயம்

இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் விழுது – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

தயிர் – 1 கப்

தக்காளி விழுது – 1/2 கப்

கொத்தமல்லி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் மட்டனை நன்கு கழுவி அதில் இஞ்சிபூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை 1/2 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவும். அதன் பின் குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

mutton curry thumb

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நாம் ஊற வைத்திருந்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது அதனை மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வேக வைக்க வேண்டும். அதன் பின் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி விழுதையும் அதில் சேர்த்து நன்கு பிரட்டவும். இப்பொழுது 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை மூடி வைத்து 4 விசில் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால் சுவையான ‘மட்டன் மசாலா’ தயார்.

loading...
Back to top button
error: Content is protected !!