பொழுதுபோக்குதமிழ்நாடு

இரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் மட்டன் ஈரல் வறுவல்..!

உடலின் இரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் ஈரலில் இப்போது வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் ஈரல் – கால் கிலோ
வெங்காயம் – 3
தக்காளி – 2
பட்டை – 1 துண்டு
கிராம்பு- 3
இஞ்சி – 1
பூண்டு – 1
மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
மிளகு தூள் – ½ ஸ்பூன்
தனியா தூள் – ½ ஸ்பூன்
சீரகத் தூள் – ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஈரலை கழுவி நறு‌க்‌கிக் கொள்ளவு‌ம். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை. ‌மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.

அடுத்து வாண‌லியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து மிளகாய்த் தூள், மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள் சேர்த்து வதக்கி ஈரல் போட்டு வதக்கவும். இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் ஈரல் வறுவல் ரெடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: