பொழுதுபோக்குதமிழ்நாடு

மட்டன் கோலா உருண்டை குழம்பு..!

உருண்டைகள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்

  • கொத்துக்கறி – 500 கிராம்
  • பூண்டு – 6 பல்
  • பட்டை – 1 துண்டு
  • கிராம்பு – 2
  • இஞ்சி – 1 அங்குலம்
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 6
  • கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 5
  • மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

குழம்பிற்கு தேவையான பொருட்கள்

  • தேங்காய் – 1
  • சிகப்பு மிளகாய் – 6
  • தனியா – 2 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பட்டை –  1
  • கிராம்பு – 2
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • பூண்டு – 6 பல்
  • மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – 1
  • கசகசா – 2 தேக்கரண்டி
  • முந்திரிப்பருப்பு – 6
  • உப்பு – தேவையான அளவு
  • இதயம் நல்லெண்ணெய் – 50 மில்லி லிட்டர்

உருண்டைகள் செய்முறை

கொத்துக்கறியுடன் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பட்டை, கிராம்பு, வெங்காயம், சோம்பு, கொத்தமல்லி இலை, மஞ்சள்தூள், உப்பு இவற்றைக் கலந்து ஆட்டி, உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.

குழம்பு செய்முறை

வாணலியைக் காய வைத்து, சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், பட்டை, கிராம்பு கசகசா, சோம்பு இவற்றை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் பூண்டு, முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துறுவி 1 கப் பால் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு, அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டுத் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த மஸாலாவைப் போட்டு வதக்கி, தேங்காய்ப்பால் ஊற்றவும்.
மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். கொதித்ததும் கறி உருண்டைகளைப் போடவும். மிதமான தீயில் வைத்து, கறி உருண்டைகள் வெந்ததும் இறக்கி, பரிமாறவும். சுவையான மட்டன் கோலா உருண்டை குழம்பு ரெடி..!

இதையும் படிங்க:  வீட்டில் அஷ்ட லக்ஷ்மி குடியேற நாம் என்னென்ன செய்ய வேண்டும் ?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: