வேலைவாய்ப்பு

தமிழக பாலிடெக்னிக் கல்லூரியில் MTS வேலைவாய்ப்பு – 10வது தேர்ச்சி போதும்!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் திருநெல்வேலியில் செயல்படும் GPC Military Canteen நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Clerk, MTS, Driver பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் வலைப்பதிவின் மூலம் ஆராய்ந்து விட்டு, அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – GPC Thirunelveli
பணியின் பெயர் – Clerk, MTS, Driver
பணியிடங்கள் – 10
கடைசி தேதி – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

அரசு வேலைவாய்ப்பு :

GPC திருநெல்வேலி Military Canteen நிறுவனத்தில் Clerk, MTS, Driver பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

Clerk – JCO/ NCO Clerk தேர்ச்சியுடன் Computer Knowledge திறன் பெற்றிருக்க வேண்டும்.
Multi-Tasking Staff – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ex-Servicemen ஆக இருத்தல் கூடுதல் சிறப்பு.
Heavy Vehicle Driver – HMV License பெற்றிருப்பதுடன் Ex-Servicemen ஆக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் GPC Tirunelveli (Military Canteen), Palayamkottai, Tirunelveli-627002 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

 

இதையும் படிங்க:  சூப்பர்! ONGC நிறுவன வேலை – 410 காலிப்பணியிடங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: