தமிழ்நாடு

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை.. பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு.. பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்து விநியோகிப்பதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு கூறியிருப்பதாவது:

* பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும்.

* வாகனத்தை கழுவும்போதும், மழை பெய்யும்போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

* பெட்ரோல் டேங்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு.

* மத்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது.

* எத்தனால் உள்ள பெட்ரோலில் தண்ணீர் இறங்குவதால் வாகனத்தை இயக்க கடினமாகும் (அ) ஜெர்க் ஆகும்.

இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!