
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து காணலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது.
இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
பெட்ரோல்- டீசல் விலை தற்போது ஏற்றம் கண்டு வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் இன்று (பிப்.,23) பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.92.90ஆக விற்பனையாகிறது.
இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.86.31 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.