தமிழ்நாடுமாவட்டம்

மாத ஊதியம் ரூ.1,19,500/-.. தேனி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்டில் இருந்து ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Manager, Executive & Driver பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

தேனி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் Manager, Executive & Driver பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

 • Manager – Dairy Science/ Dairy Chemistry/ Chemistry/ Bio Chemistry/ Bio Technology/ Quality Control/ food Technology/ Dairy Technology/ Food Processing இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • Deputy Manager – Micro Biology/ Dairy Bacteriology/ Quality Control/ Electrical & Electronics / Electronics & Instrumentation / Electrical & Instrumentation / Electronics & Communication/ Mechanical/ Civil Engineering/ Structural Engineering/ Architecture/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
 • Extension Officer Grade II – graduate தேர்ச்சியுடன் கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.
 • Executive – Diploma/ பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக பிரிவிற்கு இத்தேர்ச்சியுடன் கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.
 • Junior Executive – graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Date Entry Operator – Computer Science/ Information Technology/ Computer Application graduate பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Technician – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Light Vehicle Driver – 08ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.16,500/- முதல் ரூ.1,19,500/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

 • Written Test
 • Oral Test
 • Interview

விண்ணப்பக் கட்டணம் :

 • OC/ BC/ MBC/ DNC விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
 • SC /SCA/ ST விண்ணப்பதாரிகள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – Click Now

Official Website – http://theniaavinrecruitment.com/

Back to top button
error: Content is protected !!