வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 4,5,6ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இன்றும், நாளையும் தமிழகத்தில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிமமாக இருக்கும் என கணித்துள்ள வானிலை மையம், சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணபப்டும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை 13 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh