காலிப்பணியிடங்கள்:
சென்னையில் உள்ள State Bank of India-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Senior Executive (Economist) – 02
- Advisor (Fraud Risk) – 04
- Manager (Performance Planning & Review) – 02
- Vice President & Head (Contact Centre Transformation) – 01
- Senior Special Executive – 09
கல்வி தகுதி:
Senior Executive (Economist) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Master Degree, MBA, PGDM போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Graduation, MBA, PG in Management போன்ற degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது எனவும் அதிகபட்சம் 63 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
ஊதிய விவரம்:
- Senior Executive (Economist) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.18,00,000/- முதல் ரூ.24,00,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
- Advisor (Fraud Risk) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,00,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Manager (Performance Planning & Review) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.63,840/- முதல் ரூ.78,230/- வரை ஊதியம் பெறுவார்கள்.
- Vice President & Head (Contact Centre Transformation), Senior Special Executive பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- General/ OBC/ EWS பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC/ ST/ PWD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். Vice President & Head பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 04.05.2022 என்ற இறுதி நாளுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.04.2022 இறுதி நாளுக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh