பொழுதுபோக்குதமிழ்நாடு
செரிமானத் தன்மையினை அதிகரிக்கும் புதினா சட்னி..!
புதினா அதிக அளவில் செரிமானத் தன்மை கொண்டதாகவும், பசியினைத் தூண்டுவதாகவும் உள்ளது. இத்தகைய புதினாவில் இப்போது சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி – 2,
- புதினா – தேவையான அளவு,
- இஞ்சி – சிறிய துண்டு,
- காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
- பெரிய வெங்காயம் – 1,
- எண்ணெய் – தேவையான அளவு,
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- கடுகு- 1/ ஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு – ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி புதினா, இஞ்சி, மிளகாய், தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து இதனை ஆறவிட்டு மிக்சியில் போட்டு தண்ணீர்விட்டு மைய அரைத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டினால் புதினா சட்னி ரெடி.