‘மகாராஷ்டிராவில் நடந்த தீ விபத்துக்கு மின்கசிவே காரணம்’ – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரை இழந்துள்ளது. தற்போது இந்த விபத்துக்கு மின்கசிவு தான் காரணம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா பகுதிகளில் உள்ள பண்டாரா அரசு மருத்துவமனையில் யாரும் எதிர்பாராத வகையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் உலுக்கியது. மேலும் இந்த சம்பவம் குறித்து மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் மற்றும் மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரி போன்றவர்களை சந்தித்து இதுகுறித்து வேகமாக விசாரித்து அதற்கான தகவலை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் அந்த குடும்பங்களுக்கு நிதி உதவியாக தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி “பண்டாராவில் இதய துடிப்பு நிற்கும் அளவிற்கு ஓர் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாம் விலைமதிப்பு இல்லாத 10 குழந்தைகளை இழந்துள்ளோம். என் எண்ணம் அனைத்தும் அந்த குடும்பத்தார் பற்றியே உள்ளது” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மின்கசிவே காரணம்:
இந்த விபத்தில் இருந்து 7 குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர். தற்போது அந்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்து போன 10 குழந்தைகளில் 3 பேர் தீயினால் உடல் கருகியும் மீதம் 7 பேர் தீ புகையினால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் என்று தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு சம்பந்த பட்டவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.