இந்திய மற்றும் பாகிஸ்தானிய யூடியூப் செய்தி சேனல்களுக்கு எதிராக இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுத்து தடை செய்துள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான பிரச்சாரத்தை பரப்புவதற்காக 16 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.
நடவடிக்கை எடுத்த யூடியூப் சேனல்களில் 10 இந்திய சேனல்கள் மற்றும் 6 பாகிஸ்தான் சேனல்கள். ஐடி விதிகள் 2021ன் கீழ் இந்த சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
இந்த யூடியூப் சேனல்கள் இந்தியாவில் பீதியை உருவாக்குவதற்கும், மத நல்லிணக்கத்தைத் தூண்டுவதற்கும், பொது ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களை வழங்குகின்றன. முடக்கப்பட்ட சேனல்கள் 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்தன.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh