தமிழ்நாடு

அரசுப்பள்ளி சத்துணவில் வழங்கப்படும் ‘புல்லட் முட்டை’ – புகாருக்கு பதிலளிக்க அமைச்சர் சரோஜா மறுப்பு

அரசு சார்பில் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டை மற்றும் அதன் தரம் குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் சரோஜா பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் அனைவர் மத்தியிலும் அதிருப்தி எழுந்துள்ளது.

சத்துணவு திட்டம்:

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவமாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு மற்றும் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்கப்படுகின்றது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்திற்காக இவ்வாறாக முட்டை வழங்கப்படுகிறது. இதில் இடைத்தரகர்கள் பலர் முறைகேடுகளை செய்கின்றனர் என்று தொடர்ச்சியாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

ஆனால், இது குறித்து அரசு துறையில் இருந்து எந்த ஒரு பதிலும் வந்தபாடு இல்லை. அதே போல் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறையின்படி ஒரு முட்டை குறைந்தது 40 கிராம் அளவில் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. எடை குறைவாக இருக்கும் முட்டைகளை புல்லட் முட்டை என்று கூறுகின்றனர். அரசு நிர்ணயித்துள்ள எடையை விட குறைந்த அளவில் முட்டை வழங்கப்பட்டால் மக்கள் இது குறித்து தகுந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

இன்று சமூகநலத்துறை அமைச்சரான சரோஜா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இந்த முட்டை விவகாரம் குறித்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். அதே போல் புகாரும் தெரிவித்துள்ளனர். ஆனால், அமைச்சர் சரோஜா இதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டாராம். ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர் ஒருவர் இவ்வாறாக நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

Back to top button
error: Content is protected !!