தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் மருத்துவர்கள் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவ பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் மருத்துவர்கள் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவ பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பேரலையின் முதல் அலையின் போது தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் மருத்துவர்கள் தேவை அதிகரித்த நிலையில் மருத்துவ படிப்பில் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த மாணவர்கள் மருத்துவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது பல்வேறு மாவட்டங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. அதனால் தொற்று அதிகம் பரவி வரும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 10ம் தேதி தமிழ்நாட்டில் ஒரு லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மேலும் மருத்துவ பணியிடங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மருத்துவத்துறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் 4,308 பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட உள்ளது. அதன்படி இவர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அக்டோபர் மாத இறுதிக்குள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh