கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர். கொரோனா தடுப்பூசியின் காரணமாக கொரோனா பரவல் தற்போது குறையத் தொடங்கியது. அதனால் பல தளர்வுகள் வழங்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்ததால் மாணவர்கள் பெரும் சிரமத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன் படி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்சின் 2022 ஆம் ஆண்டு இளம் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே”. ஆகையால், இரண்டாவது அன்னையாக விளங்கக் கூடிய ஆசிரியர்கள் தான் மாணவர்களை திருத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சமூக அறக்கட்டளைகள் மாணவர்கள் நலன் சார்ந்த இடங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடம் தவறான முறைகளில் நடந்து கொள்வது, பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக மட்டுமல்லாமல், இரு குழந்தைகளின் தந்தையாகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களிடம் மன ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்வது ஆசிரியர்களின் கடமை. மாணவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யும் போது டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கல்வி வழங்குவதை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்படும். தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh