தமிழ்நாடு

அரசு பேருந்து டிக்கெட் கட்டணங்கள் உயர்வு? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக திமுக பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தது. அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கு அரசின் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்பதாகும். இந்த திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளே முதல்வர் முக ஸ்டாலின் அமலுக்கு கொண்டு வந்தார். இதனால் பெண்கள் அரசின் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கின்றனர். மேலும், அரசு பேருந்துகளில் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரமக்குடியில் சமுதாயக் கூடம் ஒன்றை திறந்து வைக்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் வந்தார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார். மேலும், பரமக்குடியில் இருந்து 12 புதிய வழித்தடங்களில் பேருந்துகளை கொடி அசைத்து துவங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழகத்தில் 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணிகள் தயாராகி வருகின்றது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், போக்குவரத்து துறையிலும், மின்சார துறையிலும் எவ்வளவு நஷ்டம் வந்தாலும், இதுமக்களுக்கான சேவை என்பதால் பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், மக்கள் மீது சுமையை சுமத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!
Back to top button
error: