தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க பல்வேறு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தொழிலார்களின் பிரச்சனைகள் குறித்து நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் பெற்று தர வேண்டுமென்றும், சம வேலைக்கு சம ஊதியம், பிழைப்பூதியம் வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டுமென்றும், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்நிலையில் தற்போது குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியத்தை நிர்ணயம் செய்து தமிழக தொழிலாளர்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல நகராட்சி, மாநகராட்சிக்கு தனியாகவும், ஊராட்சியில் பணியாற்றுவோருக்கு தனியாகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதிகபட்ச ஊதியம் வழங்கப்பட்டால் அதனை தொடர வேண்டும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: