தமிழ்நாடு

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம்!!

நாகர்கோவில் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் ராணுவ சிப்பாய் பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதால் அதற்கான விண்ணப்பங்களை செலுத்தும் படி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது நாகர்கோவில் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ராணுவ சிப்பாய் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொள்ள விரும்பும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான தகுதிகளாக, சிப்பாய் பொதுப்பணி பிரிவுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பாடத்துக்கு 33 சதவீதத்துடன், மொத்தமாக 45% சராசரி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து உயரம் 166 செமீ, மார்பளவு 77 செமீ, மார்பு விரிவளவு 5 செமீ ஆகியவற்றுடன் வயது வரம்பு 17.5 முதல் 21க்குள் இருக்க வேண்டும். மேலும் டெக்னிக்கல் பிரிவுகளில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 40% மற்றும் மொத்தமாக 50% சராசரி மதிப்பெண்களை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்ந்து அசிஸ்டன்ட் பிரிவுக்கு 12 ஆம் வகுப்பு இன்டர்மீடியேட் தேர்ச்சியுடன் இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 40% மதிப்பெண்களுடன் மற்றும் மொத்தமாக 50% சராசரி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டெக்னிக்கல் மற்றும் நர்சிங் அசிஸ்டன்ட் பணிக்கு உயரம் 165 செமீ, மார்பளவு 77 செமீ, மார்பு விரிவளவு 5 செமீ ஆகியவற்றுடன் வயது வரம்பு 17 முதல் 23க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் பிரிவுக்கு 12 ஆம் வகுப்பு இன்டர்மீடியேட் தேர்ச்சியுடன் கலை, கணிதவியல், அறிவியல் பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் ஆங்கிலம், கணக்கு, கணிதவியல், புக் கீப்பிங் பாடங்களில் 50% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்த விண்ணப்பதாரர்களது உயரம் 165 செமீ, மார்பளவு 77 செமீ, மார்பு விரிவளவு 5 செமீ ஆகியவற்றுடன் வயது வரம்பு 17 முதல் 23க்குள் இருக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் பாளையங்கோட்டை முன்னாள் படைவீரர் நல அலுவகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: