சென்னையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடுவோர், கைது செய்யப்படுவார்கள் என்று, மாநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் பைக் ரேஸை தடுக்க, போக்குவரத்து போலீஸாருடன் சேர்ந்து, சட்டம்-ஒழுங்கு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh