தமிழ்நாடு

சென்னையில் மெட்ரோ ரெயில் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்!

சென்னையில் மெட்ரோ ரெயில் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் அலுவலக நேரம் அல்லாத நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து கடைசி மெட்ரோ ரெயில் இரவு 8.55 மணி மற்றும் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு 9,50 மணிக்குச் செல்ல வேண்டிய முனையங்களைச் சென்றடையும்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அந்த நாளில் ரெயில் இயக்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இத்தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: