தமிழ்நாடு

இன்றும், நாளையும் 50% கட்டணச் சலுகை.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும், நாளையும் 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று யுகாதியும், நாளை தமிழ் புத்தாண்டும் கொண்டாடப்படுவதால், இந்த இரண்டு தினங்களும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: