தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் குளிர் பாதிப்பு அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் குளிர் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்தே மழை படிப்படியாக குறையத் தொடங்கியது. பின்னர் வானம் மேக மூட்டமாகவும், தெளிவாகவும் காணப்படுகிறது. இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த வாரம் முதல் குளிர் காற்று வீசத் தொடங்கி உள்ளது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனேக பகுதிகளில் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அதிகாலையிலும் குளிர்ச்சி நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் குளிர் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குளிர் காலத்தில் உள்ள பருவநிலை தற்போது நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் குளிர் மற்றும் பனிப்பொழிவு 23-ந்தேதி வரை காணப்படும். அதன் பிறகு மெதுவாக வெப்பம் அதிகரிக்க தொடங்கும். 24, 25-ந் தேதிகளில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும். தற்போது இயல்பு நிலையை விட வெப்பம் குறைவாக இருப்பதால் குளிர் காணப்படுகிறது. இது இந்த மாதத்தில் காணப்படும் வழக்கமான நிலைதான். வடகிழக்கு காற்று வீசுவதால் குளிர்ச்சி காணப்படுகிறது.

சென்னையில் வெப்பநிலை 20 செல்சியஸ் வரை தற்போது உள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது இயல்பு நிலைக்கு வரும் என்று இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: