ஆரோக்கியம்

ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் முலாம் பழ விதைகள்!!

முலாம் பழத்தை வாங்கினால், அதன் விதைகளைத் தூக்கி எறியும் பழக்கம் இருந்தால், இனிமேல் தூக்கிப் போட வேண்டாம்..

அதன் விதைகளையும் சாப்பிடலாம்…… ஏனெனில் நன்மைகளை வாரி வழங்கும் தன்மை முலாம் பழ விதைகளுக்கு உண்டு.

முலாம்பழ விதைகள் தலைவலி,மன அழுத்தத்திலிருந்து விடுதலை தர உதவுகிறது. இதன் விதைகளை பேஸ்ட் போல அரைத்து நெற்றியில் பற்றிட, பதற்றம் ,மன அழுத்தம் மற்றும் தலைவலி ஆகியவற்றைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

முலாம் பழ விதையில் புரோட்டீன்கள் அதிக அளவில் உள்ளது. இதில் 3.6% புரோட்டீன் உள்ளது. புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் முலாம் பழ விதைகளை அடிக்கடி சாப்பிடலாம்.

முலாம் பழத்தில் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. முலாம் பழ விதைகளை அன்றாடம் உட்கொண்டு வந்தால், கண் பார்வை மேம்படும். ஏனெனில் இந்த வைட்டமின்கள் அனைத்தும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவைகள் ஆகும்.

முலாம்பழ விதைகள் சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. இந்த விதைகள் வைட்டமின் ஈ, ஆன்டிஆக்சிடண்ட் பண்புகளை வழங்குகின்றன.இது சிறுநீரை எளிதில் வெளியேற்ற உதவுகிறது.இதன் விதைகளை உட்கொள்வதால்,இதிலுள்ள டையூரிடிக் மற்றும் தீங்குவிளைவிக்கும் பண்புகள் சிறுநீரகத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறது.

முலாம் பழ விதைகள் எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்த உதவும். ஆகவே எலும்புகளின் அடர்த்தி குறையாமல் இருக்க வேண்டுமானால், முலாம் பழ விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிடலாம்.. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு முலாம் பழ விதைகளைக் கொடுப்பது மிகவும் நல்லது. இதனால் அவர்களது எலும்புகள் வலிமையாகும்.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் .,முலாம் பழ விதைகள் உண்டு வந்தால், இந்தவிதைகள் சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடி பாதுகாப்பு அளிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீராக்கும்.

முலாம் பழ விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது . ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அவசியமான சத்தாகும்.இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினம் ஒரு கைப்பிடி இந்த விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.

முலாம் பழ விதைகள் சளி மற்றும் வைரல் தொற்றுகளில் இருந்து விடுவிக்க உதவும். நெஞ்சு சளி இருப்பவர்கள், முலாம் பழ விதைகளை சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும். முலாம் பழ விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வலிமை அளித்து, உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

முலாம் பழ விதைகளை குழந்தைகளுக்கு தினமும் சிறிது சாப்பிடக் கொடுக்கலாம்.. இதனால் அவர்களது வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.மேலும் முலாம் பழ விதைகளை குழந்தைகள் சாப்பிட்டால், அது அவர்கள் அடிக்கடி சந்திக்கும் வயிற்று பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முலாம் பழ விதைகளில் நார்ச்சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் முலாம் பழ விதைகளை அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டால், அது அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

முலாம் பழ விதைகளை தனியே எடுத்து, நீரில் அலசி நன்கு காயவைத்து சாப்பிடலாம்.விதைகளை வறுத்தும் உண்ணலாம். மேலும் இந்த காய்ந்த விதைகளை சாலட்டிலும், சாண்விட்ச் மீது தூவியும் சாப்பிடலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: