தமிழ்நாடு

“வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்” – தலைமைச் செயலாளர் இறையன்பு

தமிழகத்தில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதே உண்மை.

அதிலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், தொற்று பாதிப்பு 30,000 என்ற நிலையில் தான் இருந்து வருகிறது.

இந்தியாவில் மொத்த பாதிப்பில் பெரும்பாலான தொற்றுப் பாதிப்புகள் கேரளாவில்தான் பதிவாகின்றன. இந்த நிலையில் மூன்றாம் நிலை குறித்த அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி பாதிப்புகள் அதிகமாகாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

அதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்கிற காரணத்தால் பெரிய அளவிலான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டும் பட்சத்தில் வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
Back to top button
error: