சினிமாபொழுதுபோக்கு

குழந்தையை பார்க்க வந்த முல்லையை அசிங்கப்படுத்தும் மீனா – கோபமடையும் கதிர்!! விறுவிறுப்படையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு தற்போது புது ஜோடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் மீனாவின் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டுள்ளனர். இன்று கதிரும் முல்லையும் குழந்தையை பார்க்க மீனா வீட்டிற்கு செல்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்ணன் ஐஸ்வர்யாவை எப்படியோ சமாதானம் செய்து சிரிக்கவும் வைத்து விடுகிறார். மேலும் ஐஸ்வர்யாவிற்காக கோவிலுக்கு சென்று வரும் கண்ணனை பார்த்து முல்லையும் ஆச்சரியப்பட்டார். கண்ணனுக்கு ஐஸ்வர்யாவை பார்த்ததும் பிடித்து போய் விடுகிறது.

Capture 09

மேலும் கதிர் முல்லை ஜோடிக்கே போட்டியாக வந்து விடுவார்களோ என்று கூட பேசி வருகின்றனர். இந்நிலையில் கண்ணன் சத்தியமூர்த்தியிடம் தனக்கு ‘செலவுக்கு காசு கேட்டால் கூட ஒரு மணிநேரம் பேசுவீங்க, எனக்கு இந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கு என்று கூற அனைவர்க்கும் கஷ்டமாகி விடுகிறது.

Capture 03 1 1

இன்றைய எபிசோடில் கண்ணன் பேசியதை நினைத்து அனைவரும் வருத்தப்பட தனம் கண்ணனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். மேலும் இனிமேல் அவனுக்கு காசு கொடுக்கும்போது கணக்கு பார்க்க கூடாது என்றும் கூறுகிறார். மேலும் திடீரென தனத்திற்கு மயக்கம் ஏற்படுகிறது. இதனால் பதட்டமடையும் சத்தியமூர்த்தி ஹாஸ்பிடலுக்கு அழைக்கிறார்.

Capture 04 2

சாதாரண மயக்கம் தான் என்று கூறி எழுந்து செல்கிறார் தனம். அடுத்ததாக கதிரும் முல்லையும் குழந்தையை பார்ப்பதற்காக ஆசையாக மீனாவின் வீட்டிற்கு செல்கின்றனர். கதிர் தயங்கிய படியே வர முல்லை அவரை உள்ளே அழைத்து செல்கிறார். மீனாவும் அவரின் அம்மாவும் அவர்களை அன்போடு வரவேற்க குழந்தையை கையில் வாங்குகின்றனர்.

Capture 06 2

மேலும் கதிர் குழந்தையை தூக்க பயப்பட முல்லை அவர் கையில் குழந்தையை தருகிறார். மேலும் மீனா நீங்கள் எங்க ரூமில் தான் தங்கி இருக்கீங்களா? என்று கேட்க கதிருக்கு சங்கடமாக ஆகிறது. நான் வந்ததுக்கு அப்பறம் அந்த ரூமை விட்டு போயிடுவீங்களா? என்று பட்டுனு கேட்கிறார் மீனா.

Capture 08 2

முல்லை எதுவும் சொல்ல முடியாமல் உட்கார்ந்திருக்க என் ரூம்ல என்ன தவிர வேற யாரு இருந்தாலும் எனக்கு பிடிக்காது என்று நேராகவே கூறுகிறார். வீட்டிற்கு வரும் கதிர் முல்லை ரூமை காலி செய்கின்றனர். இதனால் ஜீவாவுக்கு சங்கடமாகிறது. மீனா வீட்டிற்கு செல்லும் ஜீவா மீனாவிடம் இதை பற்றி கேட்க அவர் கோவமடைகிறார்.

Capture 09 1

மேலும் ஜனார்த்தனன் ஜீவாவிடம் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிப்பதை பற்றி கேட்க ஜீவா ஒத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு ஜனார்த்தனன் நீ ஒத்துக்கொள்ளும் வரை விடுவதாக இல்லை என்று ஆத்திரமடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!