தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

மாநிலம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் 259 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பரவிய கொரோனாவின் “டெல்டா வகை” வைரஸின் இரண்டாம் அலை பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வருவது அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு சில மக்கள் அதாவது, வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தவர்கள் கொரோனா பயம் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கும் வெளியே வரவில்லை.

இவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தமிழக அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன் “மக்களை தேடி மருத்துவம்” என்ற மகத்தான திட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனால், பல்வேறு மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த மக்களுக்கும் எத்தனை நோய்கள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, அந்த நோய் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பது, இலவசமாக மருந்துகளை அளிப்பது போன்ற சேவைகளை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இன்றைக்கு நடந்த சட்ட பேரவை கூட்டத்தொடரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இந்த திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் மேலும் 259 கோடி ரூபாய் செலவில் மேம்பாடு செய்யப்பட்டு, விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, இந்த திட்டத்தின் மேம்பட்ட பயன்களை அனுபவிக்க இதன் பயனர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் – தகவல் வெளியீடு!!
Back to top button
error: