தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் மே மாதத்தில் தான் கொரோனா கட்டுக்குள் வரும்.. மருத்துவ நிபுணர்கள் கணிப்பு..!

மே மாதம் முதல் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொது மக்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியவில்லை.

இதன்காரணமாக ஒரே குடும்பத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எந்தவித அறிகுறியும் தென்படாதவர்கள் பலர் வெளியே சுற்றுகிறார்கள். அவர்களை அடையாளம் காணுவது சவாலான ஒன்று. அதுபோன்ற கொரோனா நோயாளிகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் மட்டுமே பயன்படுகிறது.

பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. அப்போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் பிரசார கூட்டங்களில் பொதுமக்கள் இதே பிரச்சனையை சந்தித்துள்ளனர்.

இதன்காரணமாக கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து இந்த மாத இறுதியில் உச்சத்தை தொடும். இதை கருத்தில் கொண்டே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் மே மாதம் முதல் கொரோனா கட்டுக்குள் வரும் என அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: