இந்தியா

முன்கள பணியாளர்களாய் பாடுபட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ உள்ஒதுக்கீடு – ஹர்ஷ வரதன் அறிவிப்பு

கொரோனா வைரசுக்கு பலியான முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக்கல்வியில் உள் ஒதுக்கீடு. அவர்களுக்கு மத்திய தொகுப்பில் 5 இடங்களும், ஆபத்தான பணியை மேற்கொள்பவருக்கு காப்பீட்டு தொகையாக ரூ 50 லட்சமும் வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

வாரிசுகளுக்கு உள் ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் பலரையும் காவு வாங்கி வந்தது. அதில் இறந்தவர்கள் ஏராளம் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் பாடுபட்டு இறந்தவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களது வாரிசுகளுக்கு மருத்துவக்கல்வியில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

frontline employees

மேலும் காவலர்கள், சுகாதாரப் பணியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கொரோனா வார்டில் பணிபுரிந்த பணியாளருக்கும் மருத்துக்கல்வியில் உள் ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு. கொரோனா தடுப்பில் முன்களப்பணியாளராக பணிபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களது வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஹர்ஷ்வர்தன் இன்று அறிவித்து உள்ளார்.

மத்திய அரசு

கொரோனா காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் சிகிச்சை பணியில் உயிரிழந்தவரை கவுரவிக்கும் விதமாக அவர்களது வாரிசுகளுக்கு மருத்துவக்கல்வியில் உள் ஒதுக்கீடு வழங்கியது. பின்பு மாநிலஅரசு யார் யார் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள்? என்பது குறித்த பட்டியலை அறிவித்துள்ளது.

central government 1

உயிரை பணயம் வைத்து கொரோனா தடுப்பில் பணிபுரியப்பவருக்கு ரூ 50 லட்சம் காப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்களை கவுரவிக்கும் விதத்தில் அவரது வாரிசுகளுக்கு மத்திய தொகுப்பில் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

loading...
Back to top button
error: Content is protected !!