தமிழ்நாடு

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை – நீட் தேர்வு மசோதா தாக்கல்!!

நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. அதனை தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு குறித்த சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவ கல்வி சேர்க்கைகளை இனி 12 ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான சட்டமுன் வடிவினை முன்மொழிவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வின் மூலம் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று கண்டறிய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு பயத்தின் காரணமாக அரியலூர் அனிதா முதல் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து நேற்று சேலத்தை சேர்ந்த மாணவர் நீட் தேர்வினால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு மாணவர்களின் உயிரை பறித்து வருகிறது. எனவே 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் நீட் தேர்வு விலக்கு குறித்த சட்ட மசோதாவை முதல்வர் தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க:  விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு 261 சிறப்பு ரயில்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: