இந்தியா

எல்லை பாதுகாப்பு படையினருக்கு பதக்கம் வழங்கும் விழா – எல்லையை தாக்குவோருக்கு அவர்களது பாணியிலே தாக்கப்படும் அமித்ஷா உரை!!

இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் 18வது பதக்கம் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. ஐந்து விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் போது உரையாற்றிய அமித்ஷா இந்திய எல்லைப் பகுதியில் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு அவர்களது பாணியிலேயே திருப்பி அதேபோல் கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

எல்லை பாதுகாப்பு படையினருக்கு 18வது பதக்கம் வழங்கும் விழா …

டெல்லியில் இன்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு 18வது பதக்கம் வழங்கும் விழா நடந்தது, இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்சா கலந்து கொண்டார். விழாவில் இந்திய நாட்டிற்காக போராடி வீர மரணம் அடைந்த பாதுகாப்பு வீரர்களுக்கும் , மிக தைரியமாக பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கும் பதக்கம் வழங்கினார். விழாவின் போது அமித்ஷா உரையாற்றினார். அந்த உரையில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும், எல்லை தாக்குதலின் போதும் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு வீரர்களுக்கு நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கு முதலில் நான் வீரவணக்கம் செலுத்திக்கிறேன் என்று உரிய ஆரம்பித்தார், பின் நம் நாட்டின் எல்லை பகுதியில் பணியாற்றும் பாதுகாப்பு வீரர்களால் தான் நம் இந்தியா உலக வரைப்படத்தில் சிறப்புமிக்க நாடக உள்ளது. இந்தியா துணிச்சலான நாடக நெஞ்சம் கொண்ட வீரகாளியும், போர் வீரர்களையும் ஒருபோதும் நாம் மறந்துவிட கூடாது. இந்திய எல்லை பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு. அதுமட்டுமில்லாமல் நம் இந்திய துணை ராணுவப் படைகள் மற்றும் வீரர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

எல்லை பாதுகாப்பு படையினருக்கு 18வது பதக்கம் வழங்கும் விழா …
மனித உரிமைகள் கிழக்கு பாகிஸ்தானில் அத்துமீறியது. பெண்களை சித்திரவாதம் செய்தனர். இந்நிலையில் சுதந்திர தேசமாக வங்கதேசம் உள்ளது. இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் சுதந்திரமான பாதுகாப்புக் கொள்கை நம்மிடம் உள்ளது. இதற்கிடையில் நம் இந்திய எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு மீண்டும் திருப்பி அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறினார். நாம் அனைத்து நாடுகளுடனும் அழகான நட்புடன் இருக்க வேண்டும் என்பதே நமது லட்சியம். பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றபின்னே இந்தியாவிற்கும் ஒரு தனி பாதுகாப்புக் கொள்கையை கொண்டுவந்தார். இந்தியாவின் எல்லைகளையும், அதன் இறையாண்மையையும் யாராலும் அசைக்க முடியாது என்று சவால் விட்டார் என்று அமித்ஷா உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: