சினிமாபொழுதுபோக்கு

“மாஸ்” ஆக இருக்கும் “மாஸ்டர் – திரை விமர்சனம்!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “மாஸ்டர்” படம் இன்று வெளியானதை ஒட்டி படம் எப்படி இருக்கிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. காலம் தாழ்த்தி வந்தாலும் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது, தளபதியின் “மாஸ்டர்”

பலத்த எதிர்பார்ப்புகளுடன் “மாஸ்டர்”

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படம் வெளியானது. இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே தளபதியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஆரம்பம் முதலே ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் சேதுபதியின் மாஸ் இன்ட்ரோ ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு ஈடுகட்டும் வகையில் தளபதியின் என்ட்ரியும் மாஸ் லெவலில் உள்ளது.

1600x960 983857 master

தளபதி மற்றும் மக்கள் செல்வன் வரும் காட்சிகள் அனைத்தும் மிரட்டிருக்கிறது. விஜய் சேதுபதி இந்த படத்திற்கு வில்லனாக நடிப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. அடிக்கடி வரும் பாடல்கள் படத்திற்கு தேவையில்லாமல் இருந்தாலும் இசையும் இந்த படத்திற்கு கூடுதல் பலம். ஆசிரியராக விஜய் கல்லூரில் சேர்கிறார். ஆனால் அவரது குடி பழக்கம் காரணமாக அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஆசிரியராக நியமிக்கின்றனர்.

அங்கு பல தீய பழக்கங்களுடன் விஜய் சேதுபதி இருக்கிறார். அவர் அந்த பள்ளியில் உள்ள சிறுவர்களையும் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகிறார். இதனை எதிர்த்து விஜய் போராடுகிறார். விஜய் கடைசியில் வென்றாரா? என்பது தான் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் பல வித சஸ்பென்ஸுடன் உள்ளது. அனைத்து இடங்களிலும் இயக்குனரின் பிரத்தியேக டச் இருக்கிறது. ஆகமொத்தம், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இது “மாஸ்டர்” பொங்கல் தான்.

Back to top button
error: Content is protected !!