பொழுதுபோக்கு

5 நிமிடத்தில் மஸாலா அவல்!!

தேவையான பொருட்கள்:

  • அவல் – 250 கிராம்
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 1
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை – 1 மேஜைக்கரண்டி
  • வறுகடலை – 50 கிராம்
  • மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
  • எலுமிச்சம்பழம் – 1
  • இஞ்சி – 1 அங்குலம்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

செய்முறை:

அவலை ஜல்லடையில் போட்டு அதன்மீது தண்ணீர் ஊற்றவும்.

இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில்  நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வறுகடலை, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கி, உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி, ஈரமான அவலுடன் கலக்கி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து காலை, மாலை நேர உணவாக பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: