இந்தியா

மன்மோகன் உடல் நிலை சீராக உள்ளது.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் இன்று காலை பதிவிட்ட ட்வீட்டில்,

மன்மோகன் சிங் அவர்களின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவினரிடம் விசாரித்தேன். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். மேலும், அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணம்பெற வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 88 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன்சிங், கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  புனேவில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரு வாரம் இரவு நேர ஊரடங்கு அமல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: