பொழுதுபோக்குதமிழ்நாடு

நாவில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் ஊறுகாய்..!

மாங்காய் ஊறுகாயானது தயிர் சாதத்திற்கு பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும், அந்த மாங்காய் ஊறுகாயினை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – 1
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெந்தயத்தை எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். மாங்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். அடுத்து மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறிக் கொள்ளவும். அடுத்து இதனை இறக்கி ஆறவிட்டு இதில் மாங்காவை சேர்த்து கண்ணாடி ஜாடியில் போட்டு துணியால் கட்டிவிடவும்.
ஒருவாரம் கழித்து துணியை எடுத்துப் பார்த்தால் மாங்காய் ஊறுகாய் ரெடி.

Back to top button
error: Content is protected !!