பொழுதுபோக்கு

மாம்பழ மில்க் ஷேக் செய்முறை!

மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது ஒருவிதம் என்றால் மில்க் ஷேக் செய்து ருசிப்பது தனி விதம். உடனடி எனர்ஜியைத் தரும் இந்த மாம்பழ மில்க் ஷேக் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.

செய்முறை

நான்கு கப் குளிரவைத்த பால், ஒரு கப் மாம்பழக்கூழ், நான்கு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், சில துளிகள் மாம்பழ எசென்ஸ், ஒரு சிட்டிகை கேசரி ஃபுட் கலர், தேவையான அளவு ஐஸ் துண்டுகள்.

இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் போட்டு நுரை வரும் வரை அடித்து, கிளாஸில் ஊற்றி பரிமாறவும். தேவையானால், சில மாம்பழத் துண்டுகளை மேலே போட்டுக் கொடுக்கலாம்.

சிறப்பு

கோடையில் ஏற்படும் சரும நோய்களைக் குணமாக்கும். நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த மாம்பழ மில்க் ஷேக் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: