பொழுதுபோக்குதமிழ்நாடு

நாவில் எச்சில் ஊறவைக்கும் மாங்காய் மீன் குழம்பு..!

மீன் குழம்புடன் மாங்காய் சேர்த்து வைத்தால் அதன் ருசி தனியாக இருக்கும். இப்போது நாம் மாங்காய் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

மீன் – அரை கிலோ
தக்காளி – 2
வெங்காயம் – 2
மா‌ங்கா‌ய் – 1
புளி – எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
க‌றிவே‌ப்‌பிலை – தேவையான அளவு

செய்முறை

மீனை சு‌த்த‌ம் செ‌ய்து கொள்ளவும். தக்காளி, வெங்காய‌‌ம் மற்றும் மாங்காயை நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி பு‌ளியைப் போட்டு‌க் கரை‌த்து அத்துடன் உ‌ப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சே‌ர்‌த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊ‌ற்‌றி கடுகு, க‌றிவே‌ப்‌‌பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
வத‌க்‌கிய கலவையுடன் புளி‌க் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிக்கும்போது மீன் மற்றும் மா‌ங்கா‌ய் து‌ண்டுகளை‌ப் போட்டு வேகவிட்டு இறக்கினால் மாங்காய் மீன் குழம்பு ரெடி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: