மாவட்டம்

புதுக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடியை அடுத்த புளிச்சங்காடு கைகாட்டியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சாராய விற்பனையில் ஈடுபட்ட அணவயலைச் சேர்ந்த கணேசன் என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்த 13 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய சின்னதுரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: