பொழுதுபோக்குதமிழ்நாடு

குழந்தைகளுக்கான ஈவினிங் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் “உருளைக்கிழங்கு பைட்ஸ்”.. செய்து அசத்துங்க..!

குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் எதாவது சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். குழந்தைகளுக்கு சுவையானதாகவும் அதே சமயம் சத்தானதாகவும் தர வேண்டும். அதற்கு இன்று ஸ்பெஷலான “உருளைக்கிழங்கு பைட்ஸ்” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 3
பூண்டு – 2 டீஸ்பூன்
சில்லி பிளெக்ஸ் – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/4 டீஸ்பூன்
சோள மாவு – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில், உருளைக்கிழங்கை எடுத்து அதனை வேக வைத்து கொள்ள வேண்டும். பின்பு, அதனை துருவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் எடுத்து வைத்துள்ள பூண்டினை போட்டு வதக்க வேண்டும். நன்றாக பொன்னிறமாக வதங்கியதும், அதில் எடுத்து வைத்துள்ள சில்லி பிளெக்ஸ் சேர்க்க வேண்டும்.

Capture 64

(குறிப்பு: சில்லி பிளெக்ஸ் இல்லையென்றால் வீட்டில் உள்ள காய்ந்த மிளகையினை எடுத்து அதனை மிக்ஸியில் துருவி வைத்து பயன்படுத்தலாம்) இந்த கலவையில் தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீரை சேர்த்ததும் அதில் எடுத்து வைத்துள்ள அரிசி மாவினை போட்டு அடிபிடிக்க விடாமல் கிண்ட வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

4635ad899ffd425f28ceafeb26059dae

அதில், உருளைக்கிழங்கு, சோள மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதனை சாஸ் வைத்து குழந்தைகளுக்கு பரிமாறலாம். அவ்ளோ தான்!! யம்மியான “உருளைக்கிழங்கு பைட்ஸ்” ரெடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: