பொழுதுபோக்கு

ஊரும் ருசியும் – மதுரை கிழங்கு பொட்டலம்!!

மதுரை மாநகருக்கு உள்ள பல பெருமைகளில் இந்த கிழங்குப் பொட்டலமும் ஒன்று. மதுரை ஆதி மூல வீதியில் நான்கு தலை முறைகளாக தயார் செய்து வரும் இந்த கிழங்குப் பொட்டலத்தின் சுவைஞர்கள் பலர். அந்தக் கிழங்கு மசாலாவை உங்கள் வீட்டிலேயே செய்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிட்டு நீங்களும் அந்த ருசியை அனுபவிக்கலாம்.

செய்முறை

ஒரு கப் கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். கால் கிலோ உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிதளவு உப்பு கலந்த நீரில் வேகவைத்து மசிக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கால் டீஸ்பூன் சோம்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய அரை கப் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, பூண்டு ஐந்து பற்கள், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும்.

பிறகு, கடலை மாவுக் கரைசல் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். மேலே தேவையான அளவு கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கொழுப்பை கரைக்கும் வாழைத்தண்டு சூப்!
Back to top button
error: