தமிழ்நாடுமாவட்டம்

கலெக்டரிடம் நிவாரண நிதிக்கு ரூ.2.80 லட்சம் வழங்கிய யாசகர்.. மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து 28வது முறையாக ரூ.10,000 நிதி வழங்கிய யாசகரை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். கொரோனா காலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி அளிக்க தொடங்கிய அவர் இன்றுவரை அதை தொடர்ந்து செய்து வருகிறார்.

யாசகர் வழங்கிய நிதி:

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பூல் பாண்டியன் என்பவர் மதுரையில் தங்கி யாசகம் பெற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கின் போது யாசகம் பெற்று சம்பாதித்த பணத்தில் தனது செலவு போக மீதமாக இருந்த ரூ.10,000 ஆட்சியாளரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் நல திட்டங்களுக்காகவும் வழங்கினார். அன்றிலிருந்து அவ்வப்போது தொடர்ந்து பணம் வழங்கி வந்த அவர் தற்போது 28வது முறையாக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 அளித்துள்ளார்.

gallerye 080042905 2710871

இவ்வாறு தொடர்ந்து நிதி அளித்து வரும் இவர் கடந்த சுதந்திர தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். செய்தியாளர்களிடம் இது பற்றி கூறிய இவர், “இதுவரை 28 முறை தலா 10,000 ரூபாய் வீதம் ரூ.2.80 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன். மதுரையில் இருக்கும் வரை நான் இவ்வாறு நலத்திட்டங்களுக்காக பணம் சேமித்து கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!