தமிழ்நாடுமாவட்டம்

காதல் கதை சோகம்.. காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தற்கொலை..!

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அருகே வேலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகள் சந்தியா (18) அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் காசி மகன் கதிர்வேல் (24) என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சந்தியாவை திருமணம் செய்ய கதிர்வேல் குடும்பத்துடன் சந்தியா வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால், சந்தியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சந்தியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தியை அறிந்து காதலன் துக்கத்தில் சோளிங்கர் அருகே உள்ள நரசிம்மபுரத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் கதிர்வேல் இறந்து கிடந்தார். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: