மாவட்டம்
13 வது முறை கைது செய்யப்பட்ட லாட்டரி வியாபாரி சிறையில் அடைப்பு..
திருச்சி பாலக்கரை கைம்ஸ்டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன்(50). இவர் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை காரணமாக 12 முறை பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் லாட்டரி விற்ற அவரிடம் அதே பகுதியை சேர்ந்த பால்மார்ட்டின் என்பவர் லாட்டரி வாங்கியுள்ளார். அந்த லாட்டரியில் 5 ஆயிரம் ரூபாய் பணம் விழுந்து உள்ளது. இந்த பணத்தை அவர் கேட்ட பொழுது பணம் தராமல் அவரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து பாலக்கரை போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 13வது முறையாக கைது செய்யப்பட்ட குணா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.