தமிழ்நாடு

ஆகஸ்ட் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை – கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

கோவை மாவட்டத்தில் நாளை (21.08.2021) சனிக்கிழமையன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

கேரளாவில் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஓணம் திருவிழா அறுவடைத் திருவிழாவாகவும் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடபடுகிறது. இந்த விழா காலத்தில் கேரளாவில் படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நடப்பு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் பொது இடங்களில் விழாவை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா இரண்டாம் அலை கேரளாவில் தீவிரமாக பரவுவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஏராளமான கேரளா மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் கேரளா மாநில மக்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது.

அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (21.08.2021) மாவட்ட ஆட்சியர் அரசு அலுலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக வரும் செப்டம்பர் 11ஆம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தீயணைப்புத்துறையில் மாற்றம்; முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: