தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் – ஆகஸ்ட் 31 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்பதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தற்போது ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசும், தங்கள் தேர்தல் வாக்குறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தனர். இதையடுத்து தமிழகத்தில் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ள காஞ்சிபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டது. இந்த பட்டியல் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் கண்டிப்பாக இதற்கு முன்பு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களாக மட்டுமே இருப்பார்கள். இவர்கள் இந்த பட்டியலில் தற்போது இடம் பெற சம்பந்தப்பட்ட பேரவை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பித்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  அரசின் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!!
Back to top button
error: