தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

தமிழக டாஸ்மாக் கடைகளில் உரிய நேரத்தில் மட்டும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் , மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் மதுபான விற்பனை முன்னர் காலத்தில் தனியார் வசம் இருந்தது. இதனால் போலி மதுபானம் விற்பனை தமிழகத்தில் தலைதூக்கி, பலர் உயிரிழக்கும் அவலநிலை இருந்து வந்தது. இதனால் மதுபான விற்பனையை அரசு தனது பொறுப்பில் எடுத்து, டாஸ்மாக் விற்பனை நிலையத்தை தொடங்கியது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் இருந்து வந்தது. சீர்கேட்டினை உண்டாகும் மதுபான விற்பனையை அரசு மேற்கொள்வது சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டது.

தமிழகத்தில் முழுவதுமான மது விலக்கு கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. ஆனால் அரசு உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்றும், முதல் கட்டமாக விற்பனை நேரத்தை குறைப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் மதுவிற்பனைக்கு அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டின் படி மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நடந்து வரும் மானியக் கோரிக்கை விவாதத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் ஈஸ்வரன் மதுக்கடைகள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு, மின்சாரத் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். அதில், தமிழக வாணிபக் கழகத்தின் மூலம் மதுபான கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக ஒரு நிமிடம் கூட விற்பனையை தொடரக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் சந்துக்கடைகள், பூட்டிய மதுபார்கள் மூலம் மது பாட்டில் விற்பனை செய்யக் கூடாது என்று மது விற்பனையாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தை மீறி மதுபான விற்பனை செய்யப்பட்டால் அரசு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழ்நாட்டில் புதிதாக 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
Back to top button
error: